மேற்பார்வை: அஷ்ஷெய்க். முபாரக் மதனி بإشراف فضيلة الشيخ مبارك مسعود لبي مدني

கட்டுரைகள்

ரமழானை வரவேற்போம் — அஷ்ஷெய்க். இஸ்மாயில் ஸலஃபி

ரமழானை வரவேற்போம் — அஷ்ஷெய்க். இஸ்மாயில் ஸலஃபி

அருள் வளம் பொருந்திய அற்புத மாதமாம் ரமழான் வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! பாவ மன்னிப்பும் இரட்டிப்பு நன்மையும் வழங்கப்படுகின்ற இந்தப் புனித மாதத்தின் சிறப்புக்களை அறிந்து பக்குவத்துடனும் அழகிய முறையிலும் இம்மாதத்தினை அனுசரித்து நடக்க நாம் முற்பட வேண்டும்.

குர்ஆனின் மாதம்:
இந்த ரமழானுக்கு அல்லாஹ் வழங்கிய எல்லாப் புனிதத்துவத்துக்கும் அடிப்படையாக அமைவது இம்மாத்தில் இறுதி வேதமாம் அல்குர்ஆன் அருளப்பட்டதேயாகும்.

ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவும், (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதாகவுமுள்ள அல்குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டது. எனவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். யார் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கின்றாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தை விரும்ப வில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும், அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக அவனைப் பெருமைப்படுத்து வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற் காகவும் (இவ்வாறு செய்தான்.)” (2:185)

Read more …

சுன்னாவுக்கும் பித்ஆவுக்குமிடையில்

ஷஃபான் மாத நோன்பு:

ஷஃபான் மாதம் சுன்னத்தான நோன்புகள் அதிகமாக நோக்கத்தக்க சிறந்த மாதமாகும். இருப்பினும் இந்த மாதத்தின் 15 ஆம் நாளில் விஷேடமாக நோன்பு நோற்கப்படுகின்றது. அது பராத்’, ‘விராத்என முஸ்லிம்களால் அழைக்கப்படுகின்றது. இது பித்அத்தான வழிமுறையாகும். ஷஃபான் 15 ஆம் இரவில்தான் குர்ஆன் அருளப்பட்டது என்று சிலர் நம்புகின்றனர். அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது என்ற திருக்குர்ஆனின் கூற்றுக்கு எதிரான கருத்தாக இது உள்ளது. சுன்னத்தான நோன்புகளை நோற்காது மார்க்கம் அனுமதிக்காத 15 ஆம் நாள் நோன்பை மட்டும் மக்கள் நோற்று வருவதால் ஷஃபான் நோன்பு குறித்து விளங்கிக் கொள்வோம்.

Read more …

மின்னஞ்சல் முகவரி: